அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூலை 12 , பி.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு பல்கலை கழகத்தின் திருகோணமலை வளாக முகாமைத்துவ தொடர்பாடல் பீட இறுதியாண்டு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் இம்மாத இறுதி வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென, வளாக முதல்வர் கலாநிதி வள்ளிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் திகதி கற்றல் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் பிரதி நிதிகளாக பெற்றோரும், வளாக முதல்வர் பீடாதிபதி, துணைத்தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கும் இடையில் விஷேட கலந்துறையாடல் இன்று(12) நடைபெற்றது.
இக்கலந்துறையாடலின் போது, மாணவர்களினதும், பெற்றோர்களினதும் வேண்டுகோளிற்கிணங்க தனிப்பட்ட மாணவர்கள் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளமையை கருத்திற்கொண்டு மேற்படி பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மூதவை மற்றும் பேரவையின் அனுமதியைப்பெற்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் வளாக முதல்வர் தெரிவித்தார்.
அத்துடன், அப்பீடத்தின் ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் மாணவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வளாக முதல்வர் கலாநிதி வள்ளிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .