2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

முத்திரை பொறித்தல்

தீஷான் அஹமட்   / 2018 ஜூலை 18 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அளவை, நிறுவைப் பொருட்களுக்கு முத்திரை பொறிக்கும் செயற்பாடு, தோப்பூர் உப பிரதேச சபைக் கட்டடத்தில், இன்று (18) நடைபெற்றதுடன், நாளை (19) நாளை மறுநாள் (20) தொடர்ந்தும் இடம்பெறவுள்ளது.

அளவை, நிறுவை உபகரணங்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் முத்திரை பொறிக்க வேண்டுமென்பது, அரச சட்டமாகும். இதனை மீறி முத்திரை பொறிக்காது இருப்பது தெரியவந்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, திருகோணமலை அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X