எப். முபாரக் / 2019 ஏப்ரல் 02 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடிக்கு அருகாமையில் கொட்டப்பட்டு வந்த குப்பைகள், இன்று (02) திடீரெனத் தீப்பற்றிக்கொண்டமையால், மையவாடிக்கும் தீப் பரவல் ஏற்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியெங்கும் புகைமண்டலம் போல் காட்சியளித்ததுடன், கந்தளாய் பொலிஸாருக்கு, பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து, பிரதேச இளைஞர்களின் முயற்சியுடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும், இந்தத் தீப் பரவல் காரணமாக குறித்த மையவாடியின் சில பகுதிகளும் தீயில் எறிந்துள்ளன என, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த முஸ்லிம் மையவாடிக்கு அருகாமையில் இருந்த திடல் காணிகளில், அக்காணி உரிமையாளர் நீண்ட காலமாக குப்பைகளைக் கொட்டி வந்த நிலையில், கடும் வெயில் காரணமாக, இந்தத் திடீர்த் தீப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
4 minute ago
14 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
14 minute ago
4 hours ago