Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம்
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மூதூர் வலயத்தில் இருந்து தோற்றிய மாணவர்களில் 132 மாணவர்கள் இம்முறை சித்தி பெற்றுள்ளனர் என வலயக்கல்வி திணைக்களஆரம்பப் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.எம்.எம். லாபீர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் 81 மாணவர்கள் சித்தி பெற்றிருந்த நிலையில் இம்முறை 132 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். அதிலும் பட்டித்திடல் மாணவர்கள் வலயத்தில் முதல் இரண்டு இடங்களைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் இப்பெறு பேறுகளின்படி வலயம் நாட்டில் 97ஆவது இடத்தில் இருந்தது. இம்முறை அது 82 ஆவது நிலைக்கு வந்து உயர்ந்துள்ளது.
மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலய மாணவர்கள் வலயத்தில் முதன்மை பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளனர். ஜெயராஜ் மேனுசங்கரி 187புள்ளிகள் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாவது இடத்தினையும் வலய மட்டத்தில் முதலிடத்தையும் பெற்றதுடன் செல்வன் உதயசாந்தன் டிலுக்ஷன் 184 புள்ளிகளுடன் மாவட்ட மட்டத்தில் நான்காவது இடத்தையும் வலய மட்டத்தில் இரண்டாவது இடத்திலும் சித்தி பெற்றுள்ளனர்.
இந்த பாடசாலை வரலாற்றில் இம்மாணவர்களின் சாதனை ஒரு மைல் கல் என அதிபர் க.பேரின்பநாதன் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago