Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாஸ் ஆதம்
இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலைக்கு அருகிலுள்ள சில காணிகளில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பேச முற்பட்டபோது, அவ்விடயம் தொடர்பில் இங்கு பேச முடியாது என மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தெரிவித்தார்.
மாயக்கல்லி மலைக்கு அருகிலுள்ள காணிகளில் எந்தவித அபிவிருத்தி வேலைகளையும் மறு அறிவித்தல் வரை செய்ய வேண்டாமென்று காணிச் சொந்தக்காரர்களுக்கு இறக்காமம் பிரதேச செயலாளரால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விசேட ஆணைக்குழுவை அமைக்க வேண்டுமென்று கோரி மாகாண சபை உறுப்பினரான ஆரிப் சம்சுதினால் மாகாண சபைத் தவிசாளரிடம் அவசரப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், மாகாண சபை அமர்வு புதன்கிழமை (22) நடைபெற்றபோது, தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை முன்னெடுக்காமை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தவிசாளர், 'கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் பேசி அவ்விடயம் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாணக் காணி அமைச்சரிடம் கோரியுள்ளோம். ஆகவே, இது தொடர்பில் நீங்கள் சபையில் பேச முடியாது தயவுசெய்து அமருங்கள்' எனக் கூறினார்.
இவ்வேளையில் குறுக்கிட்ட கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, 'மாயக்கல்லி மலைக்கு அருகிலுள்ள காணிகளில் அபிவிருத்திப் பணிகளைச் செய்ய வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எவ்வித நியாயமும் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றே நாம் கோருகின்றோம்' என்றார்.
10 minute ago
18 minute ago
21 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
18 minute ago
21 minute ago
23 minute ago