Editorial / 2018 மே 29 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளிக் கிராமத்தில், மக்கள் குடியிருப்பு பகுதிகளில், தொடர்ந்து யானைகளில் தொல்லைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
வெருகல் காட்டுப் பகுதியில் இருந்து வந்த யானை ஒன்று, கதிரவெளி கடற்கரையை அண்டியுள்ள பகுதியில் காணப்பட்ட தென்னை மரங்களை அழித்து சேதப்படுத்தியுள்ளது.
அத்தோடு, யானைகள் தொடர்ந்த வண்ணம் கதிரவெளி பகுதிக்கு வருகை தருவதாகவும், இதனால் மக்கள் அச்சத்தின் மத்தியில் தங்களுடைய வாழ் நாளை கழித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருகை தருகின்றது.
எனவே, இதனை உடனடியாக தடுக்கும் வகையில், அரச அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
2 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Mar 2026