Princiya Dixci / 2017 ஜனவரி 28 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, சேருநுவரப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு போத்தல் வடிசாராயத்தினை வைத்திருந்த நபரொருவருக்கு, 35,000 ரூபாய் அபராதம் விதித்து மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், நேற்று (27) உத்தரவிட்டார்.
மாவடிச்சேனை, வெருகல் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இரண்டு போத்தல் வடிசாராயத்தினை மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டு பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக வாழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலே, நேற்று (27) குறித்த அபராதப்பணத்தினை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
10 minute ago
17 minute ago
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
26 minute ago
3 hours ago