Editorial / 2018 ஜூன் 09 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடம், எதிர்வரும் 09ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, பீடாபதி குமுதுனி தேவி சந்திரகுமார் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இயங்கி வரும் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடத்தின் மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மாதம் 1ஆம் திகதியில் இருந்து கற்றல் நடவடிக்கைகளை பகிஷ்கரித்து வந்தனர்.
எனினும் இதனை முடிவுக்கு கொண்டு வர, பல்கலைக்கழகம் பல கட்டப் பேச்சுவார்தைகளை மேற்கொண்ட போதிலும், மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கையிலிருந்து விலகியிருப்பதால் தொடர்பாடல் மற்றும் வணிகக்கல்வி கற்கைகள் பீடத்தின் சகல கல்வி ஆண்டு கற்கை நெறிகளும் (YEAR 1.2,3,4, SEMESTER 2) இன்று முதல் 9ஆம் திகதி வரை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும் பீடாதிபதி தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
18 Mar 2026