2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் மரணம்

வடமலை ராஜ்குமார்   / 2018 ஜூன் 12 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராகப் பணியாற்றிய ஐங்கரன் என்பவர், கடந்த சனிக்கி​ழமை (09) இரவு 11 மணியளவில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

மூதூர் கிழக்கில், பல நூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் இவர் விளங்கினார்.

இதேவேளை, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், இலங்கை அரசாங்கத்தால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஐங்கரன். தனது வாழ்வாதாரத்துக்காக சுய தொழில் ஒன்றை மேற்கொண்டு வந்து, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பூதவுடல், திருகோணமலை உவர்மலை கண்ணகிபுரம் இல்லத்தில் வைத்து, திருகோணமலை இந்து மயானத்தில் இன்று (12) நல்லடக்கம் செய்யப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X