ஏ.எம்.ஏ.பரீத் / 2018 ஜூன் 19 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரக்கஹாகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து, தம்பலகாமம் பிரதேசத்திலுள்ள குளங்களுக்கு, விவசாயத்துக்கான நீரைக் கொண்டுவரும் செயற்றிட்டம் தொடர்பான ஆரம்பக் கூட்டம், நேற்று (18) மாலை, தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச சபை உபதவிசாளர், உறுப்பினர்கள், மதகுருமார்கள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாய உத்தியோகத்தர்கள், விவசாயிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இந்த நீர்த்தேக்கத்திலிருந்து, தம்பலகாமத்தில் உள்ள 9 குளங்களுக்கு நீரைக் கொண்டுவருவது தொடர்பாக, நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதோடு, இது தொடர்பான பணிகளைச் செய்வதற்கான அதிகாரிகள் குழுவும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
51 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
5 hours ago
9 hours ago