Princiya Dixci / 2017 மே 15 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கந்தளாயில் இருந்து குருணாகல் பகுதிக்கு டொல்பின் வான் ஒன்றில் 61 ஆடுகளைச் கொண்டு சென்ற மூவர், ஞாயிற்றுக்கிழமை (14) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
வானின் சாரதியும் உதவியாளர்கள் இருவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனரெனவும் இவர்கள், குருணாகல் மற்றும் கொழும்புபைச் சேர்ந்த 40, 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கால்நடைகளைத் துன்புறுத்தும் வகையில் சிறிய வானில் 61 ஆறுகளைக் கொண்டுசெல்வதாக, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய வான், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
16 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
48 minute ago
2 hours ago