Thipaan / 2016 ஜூலை 22 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, தம்பலகாமம் பொற்கேணி பகுதியில், முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த அண்ணனும் தங்கையும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (21) இடம்பெற்ற இவ்விபத்தில், முள்ளிப்பொத்தானை 09ஆம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த டி.கிதுஷன் (22 வயது) மற்றும் அவரது தங்கையான டி.சஜிந்தனி
(17 வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகமாக வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி, கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் மோதியதனாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சாரதியைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதியை, திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago
26 minute ago
32 minute ago