Thipaan / 2017 ஜனவரி 29 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை கந்தளாயில், வான் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்து, கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (29) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில், வான்எல பகுதியைச் சேர்ந்த நிஸங்க அபேசேன (வயது 32), டபிள்யூ.அஸங்க (வயது 28) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வான்எலவிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் குருணாகலிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற வேனும் மோதியதிலே விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
16 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
25 minute ago
3 hours ago