2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; ஒருவர் படுகாயம்

Thipaan   / 2016 ஜூன் 27 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாற்று பாலத்தருகிலுள்ள தூண் ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞரொருவர் உயிரிழந்ததுடன், இன்னொரு இளைஞன் படுகாயங்களுக்குள்ளான நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (27) பகல் 1.30 மணியளவில் இடம் பெற்ற இவ்விபத்தில், கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த வரதராஜன் சுஜீவன் (வயது 21) என்ற இளைஞன் உயிர் இழந்ததுடன், அவருடன் பயணித்த ரவீந்திரன் ரதன் (வயது 17) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளான்.

உயிர் இழந்தவரின் சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்;.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X