Thipaan / 2017 ஜனவரி 01 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.ஏ.பரீத்
ஹொரவ்பொத்தான மற்றும் கிண்ணியா கச்சக் கொட்டித் தீவு சந்தி ஆகிய இடங்களில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன், பட்டா வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் வைத்து, முச்சக்கரவண்டியொன்றின் பின் புறமாகச்சென்ற வேன் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (01) 11.00மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் மொறவெவ பகுதியைச் சேர்ந்த கே.ஏ.சுமத் நிரோஷன (34 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்த வேளை உடும்பு குறுக்காக பாய்ந்த போது, முச்சக்கர வண்டியை நிறுத்தியுள்ளார். இதேவேளை, வேகமாக பின்னால் வந்த வேன் மோதியதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்தான வேனின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கோழி ஏற்றி வந்த டிமோ பட்டா ரக வாகனமொன்று, கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியிலுள்ள மின் கம்பத்தில் மோதி, விபத்துக்குள்ளானதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா கச்சக் கொட்டித் தீவு சந்தி, தனியார் வைத்தியசாலைக்கு முன்னால், இன்று அதிகாலை (01) இவ்விபத்து ஏற்பட்டதுடன், இப்பிரதேசத்தில் சில மணிநேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு காணப்பட்டது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago