Thipaan / 2016 ஜூலை 12 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, மொறவெவ மற்றும் சம்பூர் பொலிஸ் பிரிவுகளில், நேற்று இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில், 03 வயது சிறுவன் மற்றும் ஆசிரியையொருவரும் படுகாயமடைந்தது, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், விபத்துகளுடன் தொடர்புடைய சாரதிகள் இருவரையும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இவ்வாறு படுகாயமடைந்த ஆசிரியை, திருகோணமலை, நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.தீபராணி (37 வயது) என மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலிருந்து, வவுனியா நோக்கிச்செல்வதற்காக வேகமாக வந்த வேனும் மஹதிவுல்வெவ பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் நொச்சிக்குளம் பகுதியில் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
வேனின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த 03 வயது சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த சிறுவன், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக, திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர், சேனையூர் பகுதியைச்சேர்ந்த ஜே.லுக்ஸான் (03 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago