Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2018 ஜூன் 09 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை 22ஆவது படைப்பிரிவில் கடமையாற்றி வரும் இராணுவ வீரரொருவர், 40 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன், நேற்றிரவு (08) கைது செய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தொம்பே, நாரம்பொல, மோராகம பகுதியைச் சேர்ந்த கே.ஜி.ஜானக பிரியதர்ஷன (31 வயது) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 22ஆவது இராணுவப் படை முகாமுக்குள் கடமையிலிருந்த இராணுவ வீரர் ஹெரோய்ன் வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அவரை இராணுவப் பொலிஸார் சோதனையிட்ட போது, அவரிடமிருந்து 40 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.
அதனையடுத்து, திருகோணமலை பொலிஸாரிடம் சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டாரென தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரரை, திருகோணமலை நீதவான் முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
27 minute ago
1 hours ago