2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

120 மில்லிக் கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர், திரு கோணமலை பிராந்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இன்று (29) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை சமுத்திராகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

குறித்த நபர், ஹெரோய்னுடன் திருகோணமலை மீன் சந்தைப்பகுதியில் நடமாடுவதாகத் தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்து இடத்துக்குச் சென்று, சந்தேகநபரை சோதனை செய்த போது, இவை கைப்பற்றப்பட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக இவரை திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும்  போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்  பொலிஸ் பொறுப்பதிகாரி ஜனோசன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X