Suganthini Ratnam / 2016 ஜூன் 21 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-றியாஸ் ஆதம்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப் போவதாக மீள்குடியேற்ற அமைச்சால் முன்மொழியப்பட்ட 65 ஆயிரம் இரும்பு பொருத்து வீட்டுத்திட்டம் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் இன்று செவ்வாய்;க்கிழமை நடைபெற்றது. இதன்போது, இரும்பு பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்காக அரசாங்கத்தால் 65 ஆயிரம் இரும்பு பொருத்து வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறான வீடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொருத்தம் அற்றதாகும். குறிப்பாக, வெப்பம் அதிகரித்துக் காணப்படும் காலத்தில் இவ்வீடுகளில் மக்கள் குடியிருப்பது கஷ்டமாகும். இரசாயனக் கலவையாலும்; குறைந்த உயரத்திலும் அமையும் இவ்வீட்டில் மேலும் வெப்பம் அதிகரிக்கவே செய்யும்.
குறிப்பாக, இவ்வீடுகளில் விறகுகளைக் கொண்டு தங்களுக்குத் தேவையான உணவுகளை சமைக்க முடியாத நிலைமையும் காணப்படுகிறது. மேலும் நீண்டகாலமாக இவ்வீடுகளில் வசிப்பதன் மூலம் நோய்த் தாக்கங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடும் என மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டம் மக்களுக்காக கொண்டுவரப்படும்போது எமது பிரதேசங்களில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு அமைக்கப்பட வேண்டுமென்பதுடன், அம்மக்களின் சூழலுக்கு ஏற்றவாறும் அச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும்' என்றார்.
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
6 hours ago