Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 26 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில், ஏ.எம்.ஏ.பரீத்
'இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மதமாக பௌத்தமும் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாக சிங்களமும் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. அத்துடன், இந்த நாட்டை ஆளும் பெரும்பான்மைப் பலத்தை நீங்கள் கொண்டிருப்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. இவ்வாறு உங்களின் மத, மொழி, அரசியல் அடையாளங்களை உளப்பூர்வமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில், எங்களைப் பற்றிய உங்களின் பார்வையும் அணுகுமுறையும் ஏன் இன்னும் குறுகிச் செல்கின்றது என்பதை கடும்போக்குவாதிகள் கூற வேண்டும்' என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றபோது, மாணிக்கமடு, மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பான அவசரப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இப்பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மதமாக பௌத்தம் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்று இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றைப் பின்பற்றும் மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்? எனவும் கேள்வியெழுப்பினார்.
இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாக சிங்களம் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்று, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இனங்களும் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?
இவ்வாறு நான் குறிப்பிட்டுக் காட்டியுள்ள விடயங்களானவை இலங்கை பல்லினச் சமூகங்கள் வாழும் நாடு என்பதற்குப் போதிய சான்றுகளாக அமைகின்றன. அதனால், உங்களுக்கு இந்த நாட்டில் என்ன மத, மொழி, அரசியல் உரிமைகள் இருக்கின்றதோ, அதே உரிமை ஏனைய சமூகங்கள் அல்லது இனங்களுக்கும் இருக்கின்றது என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?
மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்தில் ஒரு பௌத்தர் கூட வசிக்காத நிலையில்;, தமிழ் பேசும் சமூகங்கள் வாழ்கின்ற இடத்தில்; விகாரையை அமைக்க முனைவது எந்த வகையில் நியாயம் என்று வினவ விரும்புகிறேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
40 minute ago