Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 51 வயதுடைய ஒருவரை இம்மாதம் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலகுமாரி ரத்நாயக்க, ஞாயிற்றுக்கிழமை (5) உத்தரவிட்டார்.
திருகோணமலை கடற்கரைப் பகுதியில் மீனவர்களுக்கு இச்சந்தேக நபர் கஞ்சா விற்பனை செய்வதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சோதனை மேற்கொண்டபோது, இச்சந்தேக நபரிடம் 400 மில்லிகிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்த நிலையில், அவரைக் கடந்த சனிக்கிழமை (4) மாலை கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025