Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 08 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, மயிலவெவக் காட்டுப்பகுதியில் இன்று காலை கரடியின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் படுகாயமடைந்த நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்மீகமப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சரத் ஏக்கநாயக்க (வயது 30) என்பவரே இந்தத் தாக்குதலுக்கு உள்ளானார்.
மேற்படி காட்டுப்பகுதியில் தேன் எடுப்பதற்காக மூன்று பேர் சென்றுள்ளனர். இதன்போது, முறிந்துவிழுந்து கிடந்த மரத்துக்கு அருகில் மறைந்திருந்த கரடி, முன்னால் சென்றுகொண்டிருந்த இவரைத் தாக்கியுள்ளது.
இவரது முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கண்ணொன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.எனத் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025