2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

'கருமலையூற்றுப் பள்ளிவாசல் காணி விரைவில் விடுவிக்கப்படும்'

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 24 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கருமலையூற்றுப் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி மிக விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

இக்காணியை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்,  கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் அவரது அலுவலகத்தில் இன்று (24)  நடைபெற்றது,

இந்தக் காணி  இராணுவ முகாமுக்கு வெளியில் இருப்பதுடன், இராணுவ முகாமுக்கு இந்தக் காணி தேவையில்லை எனவும் கூறி பிரதேச செயலாளர் ஊடாக காணி ஆணையாளருக்கு அனுப்பப்படும். இதன் பிரதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் எதிர்வரும்  புதன்கிழமைக்கு முன்னர் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X