2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

‘செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்கவும்’

Princiya Dixci   / 2017 மார்ச் 25 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலயத்தில் நிலவும் வளப்பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு, பாடசாலை சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனிடம் பாடசாலைச் சமூகம் சார்பாக வித்தியாலய அதிபர் வ.மகேஸ்வரன் கையளித்துள்ளார்.

47 ஆண்டுகளைக் கடந்துள்ள இவ்வித்தியாலயத்தில் 1,200 மாணவர்கள் கற்கின்றனர்.1 தொடக்கம் 13வரையிலான வகுப்புக்கள் உள்ளன. 53 ஆசிரியர்கள் உள்ளனர். ஆனாலும், பாடசாலையில் நிலவும் சில வளப்பற்றாக்குறை காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகத் தமது கோரிக்கைக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலையில் மேலும் 9ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளனர்.

சுற்று மதில் முழுமையாக இன்மையினால் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டைபேணுவதில் சிரமங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.

ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் மிகவும் உயரம் குறைந்த பழமையானவையாக விருப்பதனால் வெப்பகாலங்களில் பிள்ளைகள் சிரமப்படு்கின்றனர். சிறுவர் முற்றம், விளையாட்டு மைதானம் என்பன  முழமைபெறாமையினால் மாணவர்களின் பிறக்கிருத்தியப்பணிகள் செய்ய முடியாதுள்ளதாகவும் இதுபொன்று நிலவும் பல்வேறு குறைபாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X