Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 06 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள டெங்குக் காய்ச்சல் காரணமாக பாடசாலை மாணவர்கள் கடந்த சில தினங்களாக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால், மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கோரிக்கை விடுத்தார்.
டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்வையிட்டதன் பின்னரே, மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
“டெங்குக் காய்ச்சலினால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, திருகோணமலையில் அதிகமாகக் காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு அவசரகால செயற்பாடுகளை சுகாதார திணைக்கம், கிழக்கு மாகாணசபை உள்ளூராட்சி மன்றங்கள் என்பன முன்னெத்த வருகின்றன.
அத்துடன், தனியார் கல்வி நிலையங்களுக்கும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நான் கோரியுள்ளேன்” என மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
47 minute ago
1 hours ago