Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 மே 03 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம், ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற வௌ;வேறு விபத்துகளில் நால்வர் பாடுகாயமடைந்துள்ளனர்.
திருகோணமலை நகரில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதியதில், சாரதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதேவேளை, சோலையடிப் பகுதியில்; நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில், அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துகளில் படுகாயமடைந்துள்ள மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறிருக்க, ஏறாவூர் பிரதான நெடுஞ்சாலை வழியாக மீன் ஏற்றிக்கொண்டு பயணித்த பிக்கப் ரக வாகனமானது,
வீதியோரமாக நடந்து சென்றவர் மீது மோதியதில், பாதசாரி படுகாயமடைந்துள்ள நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதியைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
03 Jul 2025