2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Super User   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா மத்திய கல்லூரிக்கு சுமார் 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

நிர்வாக கட்டிடமொன்றை நிர்மாணிக்கப்பதற்காகவே கிண்ணியா மத்திய கல்லூரிக்கு இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி எனது வேண்டுகோளிற்கிணங்க கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

கட்டிட நிர்மாணத்திற்கு முதற் கட்டமாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த கட்டிடம் அமையப் பெறுவதன் மூலம் கல்லூரியின் நீண்ட கால தேவையொன்று நிவர்த்தி செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Nijam Thursday, 18 April 2013 04:47 PM

    ஜாயா மகளிர் மகா வித்தியாலயம் பாவம்

    Reply : 0       0

    amusny Friday, 19 April 2013 04:13 AM

    கிண்ணியாவில் எத்தனையோ பாடசாலைகள் கட்டிடம் இல்லாம் நெற்களஞ்சிய பேக்கரி மண்டபத்தில் இயங்குவதனை தாங்கள் அருகாமையில் இருந்தும் உணராமல் இருப்பது ஏனோ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .