2026 மார்ச் 30, திங்கட்கிழமை

விளையாட்டு மைதான புனரமைப்புக்காக 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


புனரமைப்புக்காக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திருகோணமலை, அன்புவழிபுரம் தி ஃ கலைமகள் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(19) வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவின் பிரத்தியேக செயலாளர் டீ.வீ.எச்.சின்டக விஜியவர்த்தன மற்றும் பாடசாலை அதிபர் க.ரவிதாஸ் ஆகியோர் இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

இந்நிகழ்வில், அன்புவழிபுரம் கிராம உத்தியோகத்தர் ஏ.சிவானந்தம், செல்நாயகபுரம் கிராம உத்தியோகத்தர் என்.சந்திரசேகரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .