2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் 242 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Super User   / 2013 மே 08 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கியாஸ் ஷாபி


242 பட்டதாரிகளுக்கு கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 55 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் 187 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் மாவட்ட வேலைத்ததிட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்டத்தக்கது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத், மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, சபை தவிசாளர் ஆரியவதி கலபதி மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர் ரீ.எம்.நிசாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • sivanathn Thursday, 09 May 2013 07:07 PM

    நடுத்தெருவில் வைத்து ஏன் இந்த நியமனம் வழங்கல். அமைச்சில் இருக்கைகள் இல்லையா..? அல்லது ஆசிரியர்களுக்கு வெளியில் வைத்துத் தான் வழங்க வேண்டும் என்ற எண்ணமா..? என்ன ஒரு மரியாதை, மதிக்கப்படவேண்டிய எதிர்கால சமுதாயத்தினருக்கு. முதலமைச்சரே கவனியுங்கள், தூங்காதீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .