2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாவட்டத்திற்கு 3 அம்பியுலன்ஸ் வண்டிகள் கையளிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கஜன்


ஜேர்மன் செஞ்சிலுவைச் சங்கத்தின் நிதி உதவியில் 3 அம்பியுலன்ஸ் வண்டிகள் திருகோணமலை மாவட்டத்திற்கு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 28.5 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள இவ் அம்பியுலன்ஸ் வண்டிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜெகத்
அபேயசிங்க திருகோணமலை மாவட்டத்திற்கு பெற்றுகொடுத்துள்ளார்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை கிளையின் தலைவர் மருத்துவர் ஈ.ஜி.ஞானகுணாளன் இம்மூன்று அம்பியுலன்ஸ் வண்டிகளையும்; கொழும்பில் வைத்து நேற்று முன்தினம் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவை திருகோணமலை மாவட்ட குடிமக்களின் மருத்துவ தேவைகளுக்காக  பயன்படுத்தப்படுவதற்காக  சுகாதார திணைக்களத்திற்கு கையளிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் ஒரு அம்பியுலன்ஸ் வண்டி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும் இன்னொரு வண்டி குமரன்கடவை கிராமிய வைத்தியசாலைக்கும் மூன்றாவது வண்டி பதவிய தள வைத்தியசாலைக்கும் வழங்கப்பட உள்ளன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X