2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மூதூர் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (முறாசில்)
மூதூர் நத்துவதுல் உலமா அரபுக் கல்லூரியின் 38 வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை  கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இப்பட்டமளிப்பு விழாவில் 'ஷரீஆ' கற்கை நெறியைப் பூர்த்தி செய்த 111 மாணவர்களுக்கு மௌலவிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளதோடு அல்- குர்ஆன் மனனப் பிரிவில் 24 மாணவர்களுக்கு அல்- ஹாபிழ் பட்டங்களும் வழங்கப்படவுள்ளன.

கல்லூரியின் தலைவர் அஷ;nஷய்க் எஸ்.ஏ.ஜப்பார் தலைமையில் கல்லூரி அதிர் அஷ;nஷய்க் எம்.எம்.கரீம் நத்வியின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இ;ந்நிகழ்வில்;, அகில இலங்கை ஜம்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இதன்போது கல்லூரியின் 56 வது வருட பூர்த்தியை முன்னிட்டு சிறப்பிதழ் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .