2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிண்ணியா வைத்தியசாலையின் 50 ஊழியர்களுக்கு இடமாற்றம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் 50 ஊழியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ்,  இந்த வைத்தியசாலையில் தொடர்ச்சியாக 05 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு  இந்த இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

05 வைத்தியர்கள், 10 தாதிமார்கள்   உட்பட 35 சிற்றூழியர்கள் இந்த இடமாற்றத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தம்பலாகமம், மூதூர் பிரதேச வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் மூதூர், தம்பலாகமம் போன்ற வைத்தியசாலைகளில் கடமையாற்றி 05 வருடங்களை பூர்த்தி செய்தவர்கள் கிண்ணியா தள வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .