2025 மே 14, புதன்கிழமை

முதிரை மரங்களை வெட்டிய 9 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)

சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதான 9 பேரையும்  எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை  நீதிமன்ற  நீதவான் யூ.எல்.அஸ்ஹார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த 9 பேரையும்   திருகோணமலை  நீதிமன்ற  நீதவான் யூ.எல்.அஸ்ஹார் முன்னிலையில் ஆஐர்படுத்தியபோதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கும்புறுப்பிட்டி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய 9 பேரையும் கைதுசெய்துள்ளதாகவும் இதன்போது, 49  முதிரை மரக்குற்றிகளும்  மெசின் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கும்புறுப்பிட்டி பகுதியிலிருந்து கிடைத்த தகவலையடுத்து காட்டுப்பகுதியில்  சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .