2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

13 குறித்த மு.காவின் பிரேரணையை விசேட அமர்வில் விவாதிக்க இணக்கம்

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

13ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்பில் விசேட அமர்வின்போது விவாதிக்க கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்த்தும் 13ஆவது திருத்த சட்டத்தை ஆதரிக்கும் பிரேரணை தொடர்பில் மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக விவாதிப்பதற்கு அதிக நேரம் தேவை. இதனால் விசேட அமர்வின்போது இது தொடர்பாக விவாதிப்பது என இதன்போது தீர்மானிக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபையின் குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

இது தொடர்பான பிரேரணை கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை அவசர பிரேரணையாக மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலினால் சமர்ப்பிக்கப்படவிருந்தது.

எனினும் மாகாண சபையின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை அடுத்து சமர்ப்பிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி:

13 ஐ ஆதரித்து கிழக்கில் இன்று மு.கா பிரேரணை



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X