2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

13 ஆவது திருத்தம்: கிழக்கு மாகாண சபையில் விவாதம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீதான விவாதமே தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வின் இரண்டாவது நாள் அமர்வு சபையின்  தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது.

இந்த பிரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கு கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால் சபையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது. அதனையடுத்து சபை நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

அதன் பின்னர் பிரேரணை மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ.எம்.ஜெமீல் 13 ஆவது திருத்த சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்கோ அதில் திருத்தங்களை கொண்டுவருவதற்கோ இடமளிக்கமாட்டேன் என்றார்.

இந்த தனி நபர் பிரேரணையை அவர் ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .