2025 மே 15, வியாழக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை வைத்திருந்த 3 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1000 ரூபா மற்றும் 100 ரூபா போலி நாணயத்தாள்கள் பல கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியிலுள்ள வர்த்தகர் ஒருவரிடம் பொருட்களை வாங்கிவிட்டு போலி நாணயத்தாள்களை வழங்கியபோதே குறித்த வர்த்தகர் பொலிஸாருக்கு 119 இலக்கம் மூலம் தகவல் வழங்கினார். அதையடுத்தே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கிண்ணியா மற்றும் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .