Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 26 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணேஸ்வர ஆலய பரிபாலனசபையின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரனின் தலைமையிலேயே மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. 412 சாதாரண அங்கத்தவர்களும், 257 ஆயுள் அங்கத்தவர்களுமாக மொத்தம் 669 அங்கத்தவர்கள் கொண்ட பொதுச்சபையின் கூட்டம் பற்றிய அறிவித்தல் சகல அங்கத்தவர்களுக்கும் அவர்களது அங்கத்துவ அட்டைகளோடு அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற தீர்ப்பில், அங்கீகரிக்கப்பட்ட தட்சண கைலாய திருக்கோணேஸ்வர ஆலய யாப்பின் பிரிவு 04 இற்கு அமைவாக 23 பேரைக் கொண்ட நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையும், அவர்களுக்குள் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், கடந்த 12.12.2010ஆம் உரிய முறையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முதலாவது பொதுச்சபைக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தினால் பிரகடணம் செய்யப்பட்டது. அத்திகதியிலிருந்து ஒரு வருடம் பூர்த்தியாகும் நாளான 12.12.2010ஆம் திகதியன்று மீண்டும் பொதுச்சபை கூடவுள்ளது. கூட்டத்திற்கு வரும்போது அங்கத்துவ அட்டையை தவறாது கொண்டு வருமாறு அங்கத்தவர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
திருக்கோணேஸ்வரத்தில் பலமிக்க நிர்வாகக் கட்டமைப்பை வளர்த்தெடுப்பதும், கோணேஸ்வரப் பெருமானின் பெயரில் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் ஆன்மிக, சமூக, கலை, கலாசாரப் பணிகளை நேர்மையோடும் அர்ப்பணிப்புடனும்; முன்னெடுப்பதும் காலத்தின் கட்டாயமெனத் தெரிவித்த பரிபாலன சபையின் செயலாளர் க.அருள்சுப்பிரமணியம், பொதுச்சபை அங்கத்தவர்கள் அனைவரது பங்களிப்பை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
47 minute ago
2 hours ago
4 hours ago