2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்

Super User   / 2010 நவம்பர் 27 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், முறாசில்)

இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் நாடளாவிய ரீதியில் இன்று நடைபெறுகின்றது. 332 உறுப்பினர்களை இளைஞர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்காக இடம்பெறும் இத்தேர்தலில் பிரதேச செயலகங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை அவ்வவ் பிரதேசங்களில் செயற்படும் இளைஞர் கழகங்களின் அங்கத்தவர்கள் தாம் விரும்பும் உறுப்பினர் ஒருவருக்கு வாக்களிக்க முடியும்.

இளைஞர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்தேர்தலில் பிரதேச மட்ட முடிவுகளின் அடிப்படையில் இளைஞர் நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதோடு அவர்களிலிருந்து 13 பேரைக் கொண்ட அமைச்சரவையொன்றும் அமைக்கப்படவுள்ளது.

இளைஞர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு டிசம்பர் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் மூதூர் பிரதேசத்திலிருந்து தம்பிராசா மேகரன் (கலைமதி இளைஞர் கழகம்) ராசிக் நிம்ஷாட் (ஜிஹாத் நகர் இளைஞர் கழகம்), மற்றும் முஹம்மது ஜின்னா நிஸாம் (அல் பதாஹ் இளைஞர் கழகம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மூதூர் பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் பெருந்தொகையான இளைஞர்கள் வாக்களிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதேவேளை, திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு நிகவும் சோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .