Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 29 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டம் பெற்ற பட்டதாரிகளின் ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.
வீதி அபிவிருத்தி, நிர்மாணம், நீர்ப்பாசன அமைச்சு கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இவ்ஒன்றுகூடல் நிகழ்வில், 1982- 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பட்டம் பெற்றவர்களே கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாணசபை பிரதம செயலாளர் வே.பொ.பாலசிங்கம் இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நிர்மாண அமைச்சின் செயலாளர் எம்.சீ.எம்.செரீப், கிழக்கு மாகாண சுகாதார மகளிர் விவகாரம் விளையாட்டுத்துறை சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.அசிஸ், அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி ஏ.எல்.எம்.றசூல் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
25 வருடங்களுக்கு பின்னர் இவ்ஒன்றுகூடல் நடைபெற்றமை அனைத்து பட்டதாரிகளாலும் வரவேற்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இவ்ஒன்றுகூடலை தாம் நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025