2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'ஒற்றுமையை தொலைத்துவிட்ட நாம் சமாதானத்தை தேடிக்கொண்டிருக்கிறோம்'

Kogilavani   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.எஸ். குமார்)

ஒற்றுமையை தொலைத்து விட்ட நாம் சமாதானத்தை தேடிக்கொண்டிருக்கின்றோம்.  30 வருட காலம் யுத்தத்தில் இருந்த நாங்கள் இப்போது சமாதானம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.  இது எப்போது கிடைக்கும் என்று எம்மால் உறுதியாக கூறிவிட முடியாது. மனங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வே.பொ.பாலசிங்கம் தெரிவித்தார்.

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகம் நடத்திய சமாதான கலாசார விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில்  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் சி.தண்டாயுதபாணி,  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அதிபர் மா.இராசரெத்தினம்,  மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் அ.விஜயானந்தமூர்த்தி,  திருகோணமலை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் எப்.ஜி.லூயிஸ், சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.குருநாதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது நித்திலம் என்னும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .