Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
A.P.Mathan / 2010 டிசெம்பர் 22 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கல்லடிவெட்டுவான் புகாரி வித்தியாலயம், வரகாத்நகர் முஸ்லிம் வித்தியாலயம் என்பனவற்றில் 100 இற்கு 20 அடி அளவு கொண்ட வகுப்பறை தொகுதி அமைக்க ஐக்கியநாடுகள் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தலா 2 மில்லியன் ரூபாய்களை வழங்கி உள்ளது.
1990ஆம் வருடம் இப்பகுதி மக்கள் இங்கிருந்து இடம் பெயர்ந்தனர். நாட்டில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடரந்து இவ்வருடம் மீளவும் இப்பகுதி மக்கள் மீளக்குடியமரத் தொடங்கினர். இங்குள்ள பாடசாலையும் 20 வருடங்களின் பின்னர் மீள இயங்க ஆரம்பித்துள்ளது. வகுப்பறை வசதிகள் இல்லாத நிலை பற்றி பல தரப்பினரிடமும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிலையில் யுனிசெப் கட்டிடங்களை அமைக்க நிதி உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வான்அல புகாரி வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை புகாரிநகர் வித்தியாலயம் என்பனவற்றில் மலசலகூடம் மற்றும் நீர் இணைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக 14 இலட்சம் ரூபாய்களை யுனிசெப் நிறுவனம் வழங்கி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கல்வி அமைச்சின் பிள்ளைநேய பாடசாலையாக இவ்விரு பாடசாலைகளும் விளங்குகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
08 Jul 2025