2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலை இசை பாரம்பரியம் நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 24 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை இசை பாரம்பரியம் என்னும் நூல் வெளியீட்டு வைபவம்  நேற்று புதன்கிழமை   ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம் சோமஸ்கந்தர் மண்டபத்தில் நடைபெற்றது.

செல்வி மணிமேகலாதேவி கார்த்திகேசு திருகோணமலை இசை பாரம்பரியம் என்னும் நூலை எழுதினார்.

கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
பத்திரகாணி அம்பாள் ஆலய ஆதினகர்த்தா சோ.ரவிச்சந்திரகுருக்கள், பதில் செயலாளர் சி.தண்டாயுதபாணியிடமிருந்து  நூலினை பெற்று வெளியீட்டு வைத்தார்.

நூலாசிரியர் செல்வி மணிமேகலாதேவி கார்த்திகேசு  முதல் பிரதியினை இசையாசிரியர்  திருமதி சிவகாமசுந்தரி விஜயநாதனுக்கு வழங்கி வைத்து அவரிடமிருந்து ஆசி பெற்றுக் கொண்டார்.

இதன்போது,  முத்துக்குமாரசாமி கோவில் இசை நடன கலாலயத்தின் மாணவிகளின் வீணை அரங்கேற்றம் நிகழ்வும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .