2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மூதூரில் நீர் சுத்திகரிப்பு நிலைய நீர்மாண பணிகளின் ஆரம்ப வைபம் ஒத்திவைப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 27 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)
மூதூரில் இன்று இடம்பெறவிருந்த நீர் சுத்திகரிப்பு நிலைய நீர்மாண பணிகளின் ஆரம்பிப்பு வைபவம் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரதேசங்களில்  இன்று வெள்ளிக்கிழமை எதிர்;ப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என்பதனாலேயே அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவிருந்த இவ்வைபவம் பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வைபவத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ; குணவர்த்தன, கிழக்கு மாகாண ஆளுனர் ரியர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், நீர் வழங்கள் வடிகாலமைப்பு பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் பிரதி அமைச்சர் சுஸந்த புஞ்சி நிலமே, புத்த சாசன மற்றும் சமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  மூதூர் அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எஸ்.தௌபீக் உட்பட பலர் கலந்து  கொள்ளவிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .