2025 மே 08, வியாழக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸை விமர்சிப்பதற்கு அரசாங்க ஊடகங்கள் திறந்து கொடுக்கப்பட்டுள்ளன: அமைச்சர் ஹக்கீம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


இன்றைக்கு அனைத்து அமைச்சர்களுக்கும் அரசாங்க ஊடகங்கள் அனைத்தும்  திறந்து கொடுக்கப்பட்டுள்ளன.  தாராளமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை தாறுமாறாகக் கிழியுங்கள் என்று அவர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிலே நான் இடைக்கிடையே பிரபாகரனோடு நான் கதைத்தாக போன நாள் போன காலம் தொடக்கம் நடந்த பழைய கதையெல்லாம் எழுதுகிறார்கள். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்கியதில்லை. ஆனால், இப்போது சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற கதையெல்லாத்தையும் அரசாங்கம் இப்போதுதான் அவிழ்க்கிறாங்கள்  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிண்ணியா நகரசபை மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'கடந்த தேர்தலைப் போல கடைசி நேரத்தில் எடுத்த அதிரடி முடிவுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாறியிருக்கின்றது, சூடு பிடித்திருக்கின்றது. இந்தச் சூட்டையும் சுவாரசியத்தையும் இந்த முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட எடுத்த  முடிவுதான் இதனை உள்வாக்கியிருக்கின்றது என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

ஆனால் அண்மைக்காலமாக இன்று ஆட்சித் தரப்பின் அமைச்சர்கள் கூட்டம் மாறி மாறிவந்து சாரி சாரியாக எனக்குத்தான் சரமாரியாக திட்டுகின்றார்கள் என நான் கேள்விப்படுகின்றேன்.

மாட்டுப்பட்டி வைத்திருக்கிறவர்கள் மாட்டுப்பட்டியைச் சுற்றி ஒரு வேலி அடிப்பார்கள். அதிலே மாடுகளை அடைப்பார்கள். ஆனால் வேலியை அடித்துவிட்டு நடுவிலே ஒரு பெரிய கம்பை நாட்டி வைக்கின்றது.

அது எதற்கு என்றால் மாடுகளுக்கு ஏதாவது சொறி கடி வந்தால் அந்தக் கம்பில்  போய் சொறிவதற்கு. இந்த கம்பு  மாதிரித்தான் நம்ம தலைவர். எல்லாம் வந்து இவரைதான் போய் சொறிகிறார்கள்.

சேகு இஸ்ஸதின் தனது ஊரான அக்கரைப்பற்றில் நேற்று பிரமாண்டமான கூட்டம் ஒன்றை நடத்தினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அக்கரைப்பற்றுக்கு வரக் கூடாது என்று அங்கே  நாம்பன் மாடு ஒன்றிருக்கின்றது. அந்தமாடும் இந்தக் கம்பிலேதான் சொறிகிறது. வேண்டிய மட்டும் சொறிந்து கொள்ளுங்கள்.  நேற்று பேச வேண்டிய எல்லாத்தையும் அக்கரைப்பற்று மக்களுக்கு  விளக்கமாக பேசுகின்ற நிலைமையை அங்கே அக்கரைப்பற்றில் கண்டோம். எந்தவிதமான அடாவடித்தனமோ அட்டகாசம் செய்வதற்கு இடங்கொடுக்க பொலிஸார் இணங்கவில்லை.

இதற்கு முன் ஒரு இப்தாரில் படுத்தினபாடு... நோன்பாளிகளை நோன்பு திறக்க விடாமல் நோன்பு திறக்க வைத்திருந்த பொருட்களையெல்லாம் சேதப்படுத்தினர். செய்த அட்டகாசம் அவர்களுக்கு அதற்கான தண்டனை வேறு எங்கேயாவது கிடைக்கும்' என்றார்.



You May Also Like

  Comments - 0

  • rima Tuesday, 04 September 2012 05:50 AM

    தலைவா நிச்சயம் இதுக்கு பரிகாரம் உண்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X