2025 மே 08, வியாழக்கிழமை

நாங்கள் வழங்கிய அதிக விலைக்கு மாகாணசபை ஒரு தீர்வாகாது: திருமலை முதன்மை வேட்பாளர்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரமன்,கஜன்)

நாங்கள் எங்கள் சக்திக்கு மீறிய வகையில் அதிக விலையை இதுவரை கொடுத்துவிட்டோம். நாம் கொடுத்த அதிக விலைக்கு இந்த மாகாணசபை ஒரு தீர்வாகாது. எமது இனத்தின் உயிர்த் தியாகங்களுக்கு இது ஒருபோதும் ஈடாகாது என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்திற்கான முதன்மை வேட்பாளர் சிங்காரவேலு தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலய முன்றலில் நேற்று புதன்கிழமை மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

'ஒரு அரசியல் இலக்கு என்பது மக்களின் அர்ப்பணிப்பு, ஈடுபாடு, போராட்டத்தினால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. இவ்வாறு என்றால் தமிழர்களாகிய எமது பிரச்சினை எப்போதோ தீர்ந்திருக்கும். எமது பிரச்சினை இப்போது பிராந்திய, உலகளாவிய பிரச்சினையாக மாறிவிட்டது. அந்த பிராந்திய, உலகளாவிய சக்திகளின் விருப்பங்கள் மற்றும் நோக்கங்களும் எமது பிரச்சினையின் தீர்மானங்களுடனும் தீர்வுகளுடனும் இணைந்துள்ளது.

இந்த மாகாணசபையின் வெற்றியை அரசாங்கம் தமிழர்களின் இருப்பிற்கு எதிராக பயன்படுத்த எண்ணியுள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொள்ளமுடியுமா?

தமிழர்கள் உரிமையுடனே வாழத்தயாராக இருக்கின்றனர் என்பதை இந்தத்தேர்தலில் நாம் தெளிவுடன் கூறவேண்டும். இலங்கை இப்போது உலகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. இந்தத்தேர்தலில் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் எமக்கு வாக்களிக்க உற்சாகத்துடன் தயாராகிவருகின்றனர். இந்தத் தேர்தலில் நாம் அனைவரும் உற்சாகத்துடன் எழுந்து நிற்க வேண்டும். இந்த மாகாணசபை தமிழ்மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் உரியது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X