2025 மே 08, வியாழக்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் மஹ்றூபின் வீட்டிற்கு கைக்குண்டு வீச்சு

Super User   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிழக்கு மாகாண சபை தேர்தலில் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளர் எம்.ஏ.எம். மஹ்றூபின் வீட்டிற்கு இனந்தெரியாதோரால் கைக்குண்டொன்று வீசப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கிண்ணியாவில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீசப்பட்ட இக்கைக்குண்டு வீட்டிற்கு முன்னால் உள்ள மரமொன்றில் பட்டு கிழே விழுந்து வெடித்துள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X