2025 மே 08, வியாழக்கிழமை

'மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க தவறினால் அதிகாரப்பகிர்வு, ஜனநாயகத்தில் தமிழர்கள் நம்பிக்கை இழக்கு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 11 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

'முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனது இல்லத்தில் கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 11 தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பில் சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு தேர்தல் முடிவின் பின்னர் ராஜதந்திரிகள் சிலருடனும் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமச்ங்காவுடனும் உரையாடியிருக்கின்றேன். தமிழ் மக்கள் தந்துள்ள ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டும். ஜனநாயகத் தீர்ப்பை உதாசீனம் செய்யாது ஜனநாயக முடிவை மதித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் கூறினார்.

கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். தவறுகள் இடம்பெறாது இருந்திருந்தால் 12 ஆவது இடங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும் என்றும் தான் ராஜதந்திரிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்காவிற்கும தெரிவித்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகின்றது. கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்படமாட்டாது என்று தெரிகின்றது. முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

முதல் காலப்பகுதியில் முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். எம் மக்களில் அநேகர் முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்றும் மாகாண ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு ஆளும் தரப்பிற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமனற் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0

  • Mohamed Tuesday, 11 September 2012 06:12 PM

    விழுந்தும் மீசையில் மண் படவில்லை !

    Reply : 0       0

    Rasheed.M.A.A AKP Wednesday, 12 September 2012 02:50 AM

    தமிழ் முஸ்லிம்கள் வட கிழக்கில் சமாதானமாக வாழ வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் காங்கிரஸ் சரியாக‌ பயன்படுத்த வேன்டும். இதுதான் மக்களின் தீர்ப்பு.

    Reply : 0       0

    Ananth Kandy Wednesday, 12 September 2012 06:32 AM

    ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மூலம் வெற்றி பெற்ற தமிழ் வேட்பாளர்களுக்கு தமிழ் இன பற்று இர்ருப்பின் அவர்களில் சிலர் தமிழ் தேசிய கூட்டம்மைப்பில் இணைந்து ஒரு மாகாண சபையை அமைக்க வேண்டும்.

    Reply : 0       0

    குமார் Wednesday, 12 September 2012 08:22 AM

    தமிழ் கூட்டமைப்பு மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் வெற்றி பெற்றதுடன் முழு கிழக்கு மாகணத்தில் இரண்டாவது அதிக வாக்குகளுடன் (1 % இற்கு குறைவான வித்தியாசத்துடன் ) வெற்றி பெற்றுள்ளது . இதில் விழுவதற்கும் மீசையில் மண் ஓட்டுவதற்கும் என்ன இருக்கிறது?

    Reply : 0       0

    Kaneem MA Wednesday, 12 September 2012 11:06 AM

    பேரின கட்சிகளில் ஒன்றான UNP யுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பும் நீங்கள் ஏன் மற்றுமொரு பேரின கட்சியான UPFA அரசிடம் தங்களின் கோரிக்கைகளை (முஸ்லிம்களை பாதிக்காதவித‌த்தில்) சில விட்டுக்கொடுப்புக்களுடன் முன்வைத்து கிழக்கின் ஆட்சியை கைப்பற்றி அதன்முலமாக அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் பேசும் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த இத்தடவை முயற்சித்துப்பார்கலாமே.
    இது அடுத்த வருடம் இடம்பெறவுள்ள வட மாகாண சபைக்கான‌ ஒரு ஒத்திகையாகவும் அமையும்.

    Reply : 0       0

    manithan Wednesday, 12 September 2012 11:17 AM

    முகமட் உங்களுக்கு கொஞ்சம் விளக்கம் குறைவு எனது அனுதாபங்கள்.... ஜயா கூறியது எதிரனிகள் வெட்றி பெற்றுள்ளது என்பதைதான்.... தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்... அச்சமில்லை அச்சமில்லை... உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதும் அச்சம் என்பது இல்லையே....

    Reply : 0       0

    aj Wednesday, 12 September 2012 11:26 AM

    @மொஹம்ட்ட் : ஹ ஹ எதுக்கு இந்த வீண் பழமொழி. ஒருவேளை ஹிக்கிமை சொல்லுறிங்களோ? இருக்கலாம். 95 % தமிழர்கள் (வாக்களிதததில்) தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்து ஒரு செய்தியை உங்களை போல சிலருக்கும் அரசுக்கும் சொல்லி நிக்கிறார்கள். தோல்வியின் எரிச்சலே இவரின் கதறல்.

    Reply : 0       0

    Kaneem Thursday, 13 September 2012 12:06 PM

    பேரின கட்சிகளில் ஒன்றான UNP யுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பும் TNA, மற்றுமொரு பேரின கட்சியான UPFA அரசிடம் தங்களின் கோரிக்கைகளை (Muslimகளை பாதிக்காத விதத்தில்) சில விட்டுக்கொடுப்புக்களுடன் முன்வைத்து கிழக்கின் ஆட்சியை கைப்பற்றி அதன்முலமாக அதிகாரப் பகிர்வு, முதலமைச்சர் பதவி மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இத்தடவை முயற்சித்துப் பார்கலாமே.
    நடந்ததை நினைத்திருந்து பயன் ஏதும் இல்லை.
    நாய் வாலை பிடித்தாயினும் தன்காரியம் வெல்லவேண்டும் என்பர்கள். இனிமேலாவது தமிழ் பேசும் மக்ககளுக்கு ஏதாவது கிடைதாக வேண்டும். அடுத்த வருடம் (2013) இடம்பெறவுள்ள வட மாகாண சபையில் ஒரு தமிழ் முதலமைச்சர் நிச்சயம்.
    எனவே இலங்கையில் 02 தமிழ் முதலமைச்சர்கள் குரல் கொடுக்கமுடியும். இதனால் குறைந்தது 01 தமிழ் ஆளுனரைக்கூட பெற வாய்ப்புள்ளது. வடகிழக்கு (வடக்கு, கிழக்கு இணைந்த) மாகாணமாக இருப்பின் ஒரு (01) தமிழ் முதலமைச்சர் மாதிரமே இலங்கையில் இருக்க முடியும். இதனால் தமிழ் ஆளுனர் என்பது சற்று கடினமான விடயமாகும். எனவே TNA சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இதுவகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X