2025 மே 08, வியாழக்கிழமை

திருகோணமலையில் சட்டத்துறைக் கைநூல்கள் வெளியீடு

Super User   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)

 
தொழிலாளர் உரிமைகள் தொடர்பான சட்டம் மற்றும் சான்றுகள் சட்டம் ஆகிய இரண்டு நூல்கள் இன்று சனிக்கிழமை காலை திருகோணமலை இயேசு அக்கடமி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில்  வெளியிடப்பட்டன.

மனித உரிமைகள் மேம்பாட்டுக்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிரேஷ;ட சட்டத்தரணியும் சட்ட உதவி ஆணைக்குழுவின் பணிப்பாளருமான இரா.திருக்குமாரநாதனை ஆசிரியராகக் கொண்டு 'சட்டமும் நீங்களும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுவரும் சட்டக்கைநூல்களின் வரிசையில் இந்நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முதன்மை அதிதியாக கலந்து கொண்ட யு.எஸ்.எயிட் அமைப்பின் தலைமை அதிகாரி திருமதி சுசன் வார்ட், முதலில் பிரதிகளை சட்டத்தரணிகளுக்கு வழங்கினார். அதன் பின்னர் நூலாசிரியர் சட்டத்தரணி திருக்குமாரநாதன் நூல்களின் பிரதிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருமலை மாவட்ட இணைப்பாளர் திருமதி குளோறி பிரான்சிசுக்கு வழங்கினார். அரச சார்பற்ற தொண்டு ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பிரதிகள் கையளிக்கப்பட்டன.

நூல் ஆய்வுரையை கிழக்கு மாகாண சபையின் சட்ட அதிகாரி அனிபு லெப்பை நிகழ்த்தினார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X