2025 மே 08, வியாழக்கிழமை

முஸ்லிம்களின் மத விவகாரங்களில் கை வைப்பதை மேற்குலகம் நிறுத்த வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

A.P.Mathan   / 2012 செப்டெம்பர் 16 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

முஸ்லிம்களின் மத விவகாரங்களில் கை வைத்து அவர்களைப் புண்படுத்துவதை மேற்குலகு நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் இஸ்லாத்தையும், முஹம்மது நபி அவர்களையும் மிக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 'முஸ்லிம்களின் அப்பாவித்தனம்' திரைப்படம் இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் அவமதிப்பதாக உள்ளது.

இது உலகலாவிய முஸ்லிம்களின் வேதனையைக் கிளறியுள்ளது. பல்வேறு மட்டங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒற்றுமையாக வாழ்கின்ற இரு சமூகத்தினருக்கிடையே வேண்டத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.

எனவே முஸ்லிம்களின் மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் செயற்படுவதை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் உடன் நிறுத்த வேண்டும்.

உலகின் அதி உயர் ஜனநாயகம் பற்றிப் பேசுகின்ற ஒரு நாடு - முஸ்லிம்களின் நிந்தனையில் ஈடுபட்டிருப்பதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X