2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பொது இடங்களில் குப்பைகளை சேகரிப்பதற்காக கூடைகள் வழங்கல்

Super User   / 2012 செப்டெம்பர் 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்)


கிண்ணியாவில் பிரதேசத்தில் பொதுமக்களின் அன்றாட  பிரச்சினையான குப்பைகளை சேகரிப்பதற்கான குப்பை கூடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு இன்று புதன்கிழமை காலை கிண்ணியா நகர சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்டன. இதில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி மஹ்றூப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிண்ணியா பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் பொது இடங்களுக்கு வைப்பதற்காகவே இந்த குப்பை சேகரிக்கும் கூடைகள் விநியோகிக்கப்பட்டன.

கிண்ணியா நகர சபையின் கோரிக்கைக்கிணங்க இத்திட்டத்திற்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .